இளையான்குடி டாக்டர் ஜாஹிர் உசேன் கல்லூரியில் அலுவலக உதவியாளராக பணிபுரிந்து ஓய்வு பெற்றவர் பொற்கிழி கவிஞர் மு. சண்முகம். சுமார் 25 ஆண்டுகளுக்கும் மேலாக இஸ்லாம் குறித்து கவிதைகள், கட்டுரைகள் எழுதியும், பேசியும் வருபவர். இஸ்லாமிய இலக்கிய மாநாடுகளில் தவறாமல் பங்கேற்று படைப்புகளை வழங்கி வருபவர்.
’வஹியாய் வந்த வசந்தம்’ என்ற நூலுக்கு சீதக்காதி அறக்கட்டளையின் ஷேக் சதக்கத்துல்லாஹ் அப்பா பரிசினைப் பெற்றவர். இந்நூல் 1990 ல் கீழக்கரையில் நடைபெற்ற ஐந்தாவது உலக இஸ்லாமிய இலக்கிய மாநாட்டில் வெளியிடப்பட்டு தற்பொழுது முதுவை காஹிலா பதிப்பகத்தால் மறுபதிப்பு செய்யப்பட்டுள்ளது.
இளையான்குடியில் நடைபெற்ற இஸ்லாமிய நிகழ்வின் போது நேற்று 17.07.2011 ஞாயிற்றுக்கிழமை இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டார்.
தனது பெயரை ஹிதாயத்துல்லா என மாற்றிக் கொண்டார்.
புதன், 20 ஜூலை, 2011
செவ்வாய், 5 ஜூலை, 2011
KEYS
அசலாமு அழைக்கும். கீழாயூர் அமீரக இளைஞர் குழு ,{Keelayoor Emirates Youth soceity}KEYS ஐக்கிய அரபு அமீரகத்தில் சிறப்பாக தொடங்கி செயல்பட்டு வருகிறது எதிர் வரும் ரமலான் மாதம் முதல் தனது நற்பணிகளை ஊரில் செயல்படுத்த உள்ளது .அதற்கான குழு உறுப்பினர்களையும் கூடிய விரைவில் தேர்ந்தெடுக்க உள்ளோம்,மார்க்கம் .கல்வி உதவி போன்ற போன்ற காரியங்களை இந்த குழு முதன்மையாக எடுத்து நடத்தும்.எனவே இந்த குழு சிறப்பாக செயல்பட சகோதர சகோதரிகள் அனைவரும் து ஆ செய்யுமாறு அன்புடன் கேட்டுகொள்கிறோம்
இவன்
கீழாயூர் அமீரக இளைஞர் குழு {keelayoor emirates youth society} KEYS
இவன்
கீழாயூர் அமீரக இளைஞர் குழு {keelayoor emirates youth society} KEYS
இளையான்குடி தக்வா டிரஸ்ட்டின் கல்வி மற்றும்சமூக உதவிகள்
இளையான்குடியில் இஸ்லாமிய மார்க்கப்பணிகள் மற்றும் சமூக உதவிகளில் ஈடுபட்டு வரும் இளையான்குடி தக்வா டிரஸ்ட்டின் (ITT) சார்பாக இளையான்குடி மாணவ-மாணவிகளுக்கு கல்வி உதவிகள் வழங்கப்பட்டது. 11 மாணவ-மாணவிகளுக்கு ரூ.16,595 ரூபாயை பகிர்ந்து வழங்கப்பட்டது. இளையான்குடி கீழாயூரைச் சேர்ந்த ஒரு ஏழைப்பெண்ணுக்கு வாழ்வாதார உதவியாக தையல் மெஷின் ஒன்றும், இளையான்குடியைச் சேர்ந்த ஒருவருக்கு வாழ்வாதார உதவியாக ஐஸ் வியாபாரம் செய்வதற்கு ட்ரை சைக்கிள் ஒன்றும் வழங்கப்பட்டது.
இளையான்குடி தக்வா டிரஸ்ட்டின் இஸ்லாமிய நூலகத்திற்கு வருகை புரிந்த கவிஞர் சண்முகம் அவர்களுக்கு இளையான்குடி தக்வா டிரஸ்ட்டின் சார்பாக திருக்குர்ஆன் தமிழாக்கமும், ஹதீஸ் தமிழாக்கமும் வழங்கப்பட்டது.
இளையான்குடி தக்வா டிரஸ்ட்டின் இஸ்லாமிய நூலகத்திற்கு வருகை புரிந்த கவிஞர் சண்முகம் அவர்களுக்கு இளையான்குடி தக்வா டிரஸ்ட்டின் சார்பாக திருக்குர்ஆன் தமிழாக்கமும், ஹதீஸ் தமிழாக்கமும் வழங்கப்பட்டது.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)
